பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் - குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் : குமரி எஸ்.பி.யிடம் மாதர் சங்கத்தினர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்ககன்னியாகுமரி மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லாபாய், முன்னாள் எம்எல்ஏ லீமாறோஸ், உஷாபாசி உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் அளித்த மனு விவரம்:

கன்னியாகுமரி மாவட்டம் வீயன்னூரைசேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட 36 வயது பெண் தனது 17 வயது மகனுடன்வசித்து வந்தார். பிழைப்புக்காக புத்தன்சந்தையில் உள்ள திருமண தகவல் மையத்தில் வேலைக்கு சென்று வந்த அந்தபெண்ணை, மையத்தின் உரிமையாளர் ஜெபர்சன் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்நிகழ்வை வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்துள்ளார்.

அத்துடன் செட்டிசார்விளையை சேர்ந்த ஜாண்பிரைட், அருமனையைசேர்ந்த ஸ்டீபன், கலிஸ்டஸ் ஜெபராஜ்,கென்ஸ்ட்லின் ஜோசப் மற்றும் வெளிநாட்டில் வேலைபார்க்கும் 3 பேர் சேர்ந்து நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில்உள்ள ஜெபர்சனின் கோழிப்பண்ணையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பலநாட்களாக இந்நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் அப்பெண் முறையிட்டபோதும் அலைக் கழிக்கப்பட்டுள்ளார். நீண்ட போராட்டத்துக்கு பின்னரேமார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இச்சம்பவத்தில் புலனாய்வு சரியான கோணத்தில் நகர்வதாக தெரியவில்லை. குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, இவ் வழக்கில் தற்போதைய விசாரணை அதிகாரியை மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் பாரபட்சமில்லாத வேறு அதிகாரியை அமர்த்தி சிறப்பு புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசிடமிருந்து தகுந்த இழப்பீடு பெற்று வழங்க வேண்டும். அவருக்கும், அவரது மகனுக்கும் வயது முதிர்ந்த தாயாருக்கும் பணபலமும், அதிகாரபலமும் கொண்ட குற்றவாளிகளால் ஆபத்து ஏற்படும் சூழல்உள்ளது. எனவே, காவல்துறைஉரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்