டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காணொலிபகுத்தாய்வாளராக கலந்துகொண்ட அசோக் குமாருக்கு, நீலகிரி மாவட்டம் குன்னூரில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியைசேர்ந்த அசோக் குமார் ‘ஹாக்கி நீலகிரிஸ்’ அணியில் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் காணொலி பகுத்தாய்வாளராக (வீடியோ அனலிஸ்ட்) பணியாற்றினார்.ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பிரிவில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்நிலையில், சொந்த ஊரான குன்னூருக்கு அசோக் குமார் திரும்பினார். அவருக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சியினர் பூங்கொத்து கொடுத்து, மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். இதில் ‘ஹாக்கி நீலகிரிஸ்’ அமைப்பின் தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஸ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா உட்பட காந்திபுரம் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago