கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகர் நலவாரியத்தில் உறுப்பிராக எவ்வித கட்டணமும் இல்லாமல் வருகிற 14-ம் தேதிக்குள் சேர்ந்துகொள்ளலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வணிகர்களின் நலன் கருதி, வணிகர் நலவாரியம் மூலம் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.40லட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்கள், வணிகர் நலவாரியததில் உறுப்பினராக சேருவதற்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் வருகிற 14-ம் தேதிக்குள் இலவசமாக சேர்ந்து பயன்பெறலாம்.
நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதால் பல் வேறு நலத்திட்டங்கள் பெறலாம்.மேலும் உறுப்பினர் ஆவதற்கு ஜிஎஸ்டி பதிவெண் அவசியமில்லை. வணிக உரிமம் இருந்தால் போதுமானது. இதில் உறுப்பினராக விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் மற்றும் உரிய விவரங்களை www.tn.gov.in/tntwb என்கிற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago