ரயில் நிலைய நகரும் படிக்கட்டு கேட்டு மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ஆனால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் சந்திப்பில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும், சிறப்பு ரயில்களில் மூடப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் பெட்டிகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும், ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை, வீல்சேர், வாகன நிறுத்தமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் வி.முனுசாமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ப.பாரதி அண்ணா, மாவட்டச் செயலர் வி.அரிகிருஷ்ணன், பொருளாளா் பி.பி.பாலாஜி, நிர்வாகிகள் எஸ்.தாட்சாயினி, எப்.அருள்ராணி, எம்.வள்ளிகண்ணன், என்.அன்பு உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, ரயில் நிலைய அலுவலரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதேபோல, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், தாம்பரம் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் என்.சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்