செப். 1-ம் தேதி முதல் பட்டுநூலுக்கு கூலி உயர்வு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்திவெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு டேன் சில்க் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் நிலையத்தில் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று பட்டு முறுக்காளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று முறுக்கேற்றிய பட்டு நூலுக்கு கூலி உயர்வு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் முறுக்கேற்றிய பட்டு நூல் இனங்களுக்கு தகுந்தாற்போல் 60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை கூலியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்