குமராட்சி வட்டார வளமைய அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜசேகரன்,ஜெயக்குமார் ஜான்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். குமராட்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர் முருகானந்தம் கணக்கெடுப்புபணியின் வழிமுறைகள் பற்றி விரிவாக கூறினார். இக்கூட்டத்தில் களப்பணியாளர்களாக பணியாற்ற உள்ள ஆசிரியர் பயற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
குமராட்சி வட்டாரத்தல் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியும் சிறப்பு கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இப்பணி வரும் 31-ம் தேதி வரை நடைபெறும். இக்கணக்கெடுப்புப் பணியில் குமராட்சி வட்டாரத்துக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புப் பகுதியிலும் உள்ள குழந்தைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். அவர்களில் கடந்த ஓராண்டு காலமாக எந்தவித கற்றல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறன் குழந்தைகள் எவரேனும் இதுவரை பள்ளியில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்களையும் பள்ளிகளில் சேர்த்து அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 6 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் கணக்கெடுப்பு களப்பணி நடைபெறும் என்று குமராட்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago