அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்கவும் : முதல்வர் ரங்கசாமியிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

By செய்திப்பிரிவு

அரும்பார்த்தபுரம் புறவழிச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி எதிர்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ தலைமையில், திமுக எம்எல்ஏ சம்பத் மற்றும்நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமி யிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது:

விழுப்புரத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் புதுச்சேரி நகரப்பகுதிக்கு வந்து போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் இருக்க, அரும்பார்த்தபுரத்தில் இருந்து முதலியார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகில் 100 அடி சாலையை இணைக்க புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நில ஆர்ஜிதத்துக்கு பெருமளவில் தொகை வழங்கப்பட்டும் பாழாகி வருகிறது.

அந்த புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தால் புதுச்சேரி - விழுப் புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகள் தவிர்க்கப்படும். நில ஆர்ஜிதம் செய்து தற்போது பயன்பாட்டுக்கு இல்லாமல் இருக்கும் இடத்தில் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

மேலும், அருகில் உள்ள வேல்ராம்பட்டு ஏரி நிரம்பும்போதும், வெளியேறும் நீரும் அங்கு பாய்ந்து தேங்குகிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் ஏரி நீர் வெளியேற பாலங்கள் கட்டப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு நிலத்தின் மட் டத்தை கணக்கிட்டு மழைநீர் வெளி யேறுவதற்கு பாலங்கள் துரிதமாக அமைக்கப்பட வேண் டும்.

புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதற்கும், புறவழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, புறவழிச்சாலை பணிகளை உடனடியாக போர்க் கால அடிப்படையில் தொடங்கி முடிக்க வேண்டும்.

மேலும் அப்பாதையில் நீர் தேங்காமல் இருக்கின்ற நிலையை போக்கி பாதுகாப்பான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்