வானூர் அருகே செம்மண் நிலப் பரப்பில் இருந்து கூழாங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.
வானூரையொட்டிய பகுதி முழுதும் பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் நிலப்பகுதியாக உள் ளது. இங்கு மானாவாரியாக முந் திரி பயிரிடப்படுகிறது.
இந்த நிலப்பரப்பில் கூழாங்கற்கள் அதிகளவில் புதைந்துள் ளன. இதனால் விவசாயம் செய்யமுடியாது என நினைத்த விவசாயிகள், நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தை வாங்கி யவர்கள் மண்ணில் கூழாங் கற்கள் வளம் உள்ளதை அறிந்து அதனை எவ்வித அனுமதியும் பெறாமல் தோண்டி எடுத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். குறிப்பாக வானுார் அருகே ராயபுதுப்பாக்கம் கிராமத்திலிருந்து மாத்துார் செல்லும் குறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி கூழாங்கற்களை எடுக்கின்றனர். இதற்காக நிலத்தில் இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுகின்றனர். தோண்டி எடுக் கப்படும் கூழாங்கற்களை சல்லடை மூலம் சலித்து மண்,சிறிய கற் கள், பெரிய கற்கள் என ரகம் பிரிக்கின்றனர். இதனால் விரைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கூழாங்கற்களை பூங்கா அமைக்கவும், மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், தொழிற்சாலை மற்றும் பங்களா வீடுகளின் அழகிற்காகவும், ஆழ்துளை கிணறில் சுற்று சுவர் அமைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
சிறிய கற்களுக்கு சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திருவண் ணாமலை பகுதியில் அதிகம் தேவை இருப்பதால் இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சிறிய மற்றும் பெரிய கற்கள் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஒரு டன் ரூ.10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கனிவமவளத் துறையினரிடம் கேட்டபோது, கோட்டகுப்பம், ஆரோவில் வானூர் காவல் நிலையங்களில் இக்கொள்ளை தொடர்பாக 20க்கும்மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுநிலுவையில் உள்ளது.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு தேவையான ஊழியர்கள் பற்றாக்குறைஉள்ளதால் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்க முடிய வில்லை. விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago