புதுச்சேரி மாநில பாமக நிர்வா கத்தை மறுசீரமைக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புத லுடன் புதுச்சேரி மாநில பாமகவின் மாநில நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இயக்கப் பணிகள் மறு சீரமைக்கப்படுகின்றன.
புதுச்சேரி, காரைக்கால், மாஹேமற்றும் ஏனாம் உள்ளிட்ட பகுதிகளின் மாநில, மண்டல மற்றும்கொம்யூன் வரையறை அளவில்உள்ள கட்சியின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் (இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் சமூக ஊடகப்பேரவை உள்ளிட்ட) ஆய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப் படும்.
மறுசீரமைப்பு மற்றும் கட்சிக் கட்டமைப்புப் பணிகளுக்காக மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ் தலைமையில் ஒரு உயர் மட்ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இக்குழு மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கிளை அமைத்து நிர்வாகிகளைத் தேர்வு செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் தலைமைக்கு அறிக்கை சமர்ப் பிக்க வேண்டும்.
பின்னர் மாநில கட்சி, சமூக ஊடகப்பேரவை, இளைஞர், இளம்பெண்கள், மாணவர் மற்றும் தொழிற் சங்கங்களின் அனைத்து நிலை நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார்கள். இதற்கு கட்சியின் அனைத்து செயல் வீரர்களும் முழு ஒத்துழைப்பை உயர் மட்ட நிர்வாகக்குழுவுக்கு அளிக்க வேண்டும்.
குழுவின் பணிகளைத் திட்ட மிட்டு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை செய்து, அதன் முடிவுகளைத் தலைமைக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பும், முழு அதிகாரமும் இக்குழுவின் தலைவருக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago