ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே மல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (45). இவர் பார்த்திபனூர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை நான்கு வழிச்சாலையில் வரும்பொழுது எதிரே வந்த தண்ணீர் லாரி இவர் மீது மோதியது. இதில் அய்யாச்சாமி உயிரிழந்தார்.
இறந்த அய்யாச்சாமிக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (50) என்பவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago