குவாரி நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலை தெருவைச் சேர்ந்த அப்பாஸ் மகன் ரசாக் (11). அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் குமார் (10). அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் தாத்தான்குளம் அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் நீச்சல் பழகச் சென்றனர். நீரில் இறங்கியவர்கள், ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர்.

நேற்று முன்தினம் இரவு வரை சிறுவர்களை காணாமல் பெற்றோர் தேடினர். கல்குவாரி மேட்டில் உடைகள் இருந்தது தெரிய வரவே தீயணை ப்புத் துறையினர் உதவியுடன் தேடும் முயற்சி நடந்தது. நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின் சிறுவர்கள் இருவ ரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்