சிவகங்கை நகராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை நகராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை நகராட்சி 22-வது வார்டு குமரன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த ஒன்றரை மாதமாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. துர்நாற்றத்துடன் வரும் நீரை பயன்படுத்த முடியாததால் அப்பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்குகின்றனர்.

நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து குமரன்தெரு மணி கூறுகையில், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் மாதம்ரூ.2 ஆயிரம் செலவாகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றார்.

இதுகுறித்து நகராட்சி பணியாளர்கள் கூறுகையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.

அந்த உடைப்பு எங்கே ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் சரி செய்வோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்