சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய ஓவர்சீயராக பணிபுரிபவர் முத்துமாணிக்கம். குடிமராமத்து திட்டப் பணிக்கு பணம் விடுவிப்பது தொடர்பாக ஒப்பந்ததாரர்களான கண்ணங்குடியைச் சேர்ந்த ரமேஷ் (41), பனசம் கோட்டையைச் சேர்ந்த ராஜாங்கம் (45) ஆகியோருக்கும் ஓவர்சீய ருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ரமேஷ், ராஜாங்கம் மீது ஓவர்சீயர் முத்துமாணிக்கம் தேவகோட்டை தாலுகா போலீஸில் புகார் கொடுத்தார். ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் ஓவர்சீயர் முத்து மாணிக்கம் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து முத்து மாணிக்கத்தை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago