மின் துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மின்சார தொழிலாளர்கள் சார்பில் நாகையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்சாரத் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களை அனுமதிக்க மாட்டோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செயல் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நாகை மாவட்ட துணைத் தலைவர் வீராசாமி முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சரவணக்கண்ணன், சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் வெற்றிவேல், ஹிந்துஸ்தான் மஸ்தூர் யூனியன் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் வாசுதேவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்