அண்ணா தொழிற்சங்க நாகை மண்டல நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் :

By செய்திப்பிரிவு

நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நாகை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், நாகை மண்டல நிர்வாகிகள் மற்றும் 11 பணிமனை நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ், அதிமுக நகரச் செயலாளர் தங்க.கதிரவன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கே.சிவன், போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன், அதிமுக மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நாகை மண்டல நிர்வாகிகள் மற்றும் 11 பணிமனை நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கினர். கூட்டத்தில், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் எஸ்.ஆர்.சிவபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க நாகை மண்டலத் தலைவர் சந்தானம், மண்டலச் செயலாளர் முருகேசன், மண்டலப் பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்