மருத்துவம், பொறியியல் பயிலும் மாணவர்கள் - உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை ரூ.50,000 வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறாமல், அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் இருப்பிடச் சான்று பெற்றவராகவும், குடும்ப ஆண்டுவருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை பெற்றவர்களாகவோ, கல்வி உதவி பெறும் விவசாயிகளின் மகன்கள், மகள்கள், கல்வி உதவி பெறும் இறந்த அரசு பணியாளர்களின் மகள்கள், மகன்கள், கல்வி உதவி பெறும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்களாக இருக்க கூடாது.

தகுதியுடைய மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், குடியிருப்பு சான்று, வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை நகல், குடும்ப உறுப்பினர்கள் வயது, கல்வித்தகுதி மற்றும்வருமானம் ஆகிய விவரங்களுடன் அவரவர் பயின்று வரும் கல்லூரிமுதல்வர் மூலம் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்