தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
கால்வாய் கிராமத்தில் உள்ள உலக முத்தாரம்மன் பூதநாதர் கோயில் கொடை விழாவை முன்னிட்டு ஊர் மக்கள் சார்பாகமாட்டு வண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயத்துக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 67 மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகள் கலந்துகொண்டன.
மாட்டு வண்டி போட்டியில் சிறிய ரக மாட்டு வண்டி மற்றும் பெரியரக மாட்டு வண்டி என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. காலை6 மணிக்கு தொடங்கி 10 மணிவரை போட்டிகள் நடைபெற்றன. கால்வாயில் தொடங்கி வல்லக்குளம் வழியாக தாதன்குளம் வரைசென்று திரும்பும் வகையில் பந்தய தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறங்களிலும் சுற்று வட்டார கிராம மக்கள் திரண்டு நின்று ஆரவாரம்செய்து ரசித்தனர். வெற்றி பெற்றமாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago