கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி இருப்பு மற்றும் உபயோகத்துக்கு தடை விதித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,நாகர்கோவில் மாநகராட்சி தீர்மானத்தின்படி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்100 சதவீதம் முழுமையாக அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநகராட்சியாக அறிவிக்க கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உள்ளாட்சி அமைப்புகள் 1,846 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, ரூ. 3,19,900 அபராதம் வசூலித்துள்ளன. அனைத்து கடைகள் மற்றும் அங்காடி உரிமையாளர்களும், பொதுமக்களும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago