நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் - ரூ.2 கோடி தகுதி சார் கல்வி உதவித்தொகை :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிசார்பில், கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்விநிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ராமசாமி நினைவாக, தகுதி சார் கல்வி உதவித்தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நேஷனல் பொறியியல் கல்லூரியில், இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களில் 190-க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 100 சதவீத கல்லூரி கல்விக் கட்டணம் இலவசம். இவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு கல்லூரி விடுதி அல்லது பேருந்துகட்டணமும் இலவசம். 180-க்கு அதிகமானகட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக்கட்டணம் வழங்கப்பட உள்ளது.

விளையாட்டுத் துறையில் தேசிய சாதனை புரிந்தவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை, விடுதி அல்லது பேருந்துக் கட்டணம் இலவசம். மாநில சாதனை புரிந்தவர்களுக்கு விடுதி அல்லது பேருந்துக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், இதரக் கட்டணத்திலிருந்து விலக்கும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் 32 பொறியியல் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

இதேபோல், முதுநிலை பயில விரும்பும் மாணவர்களுக்கு 80 சதவீத கல்விக் கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. முழுநேர (பி.எச்.டி.) ஆராய்ச்சி படிப்பு பயில விரும்புபவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும். இத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடி தகுதி சார் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்த விவரங்களுக்கு 99769 05330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை திட்டத்துக்கு தகுதியுள்ள மாணவர்கள் www.nec.edu.in என்ற கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யலாம். இத்தகவலை கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் தெரிவித்துள்ளார். .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்