ஜவ்வாதுமலை அருகே விசாரணைக்கு வந்த - அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் :

By செய்திப்பிரிவு

ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட ஊர்கவுண்டனூர் ஊராட்சியில் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊர்கவுண்டனூர் கிராம ஊராட்சியில் கோயில்கொல்லை, பாம்பாத்தூர், புதூர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அடங்கியுள்ளன. இதில், ஊராட்சி மன்றத் தலைவராக கோவிந்தராஜ், துணைத் தலைவராக ஏழுமலை ஆகியோர் உள்ளனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. கிராம ஊராட்சியில் மாதந்தோறும் நடத்த வேண்டிய உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தாமலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டம், ஆடு, மாடு கொட்டகை ஒதுக்கீடு, சிறு தடுப்பணை கட்டுதல், சிமென்ட் சாலை அமைத்தல் போன்ற பணிகளில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் லட்சுமிநரசிம்மன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரணைக்காக ஊர்கவுண்டனூர் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு நேற்று சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசார ணையில் பெரிய முன்னேற்றம் இல்லை என்பதுடன் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதர வாக அதிகாரிகள் குழுவினர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊராட்சி மன்றத்தலைவருக்கு மூன்று மாத காலம் கெடு விதித்து விசாரணையை முடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட முயன்ற அதிகாரிகளை, ஊர்கவுண்டனூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக அதிகாரிகள் குழுவினர் இருப்பதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் நீண்ட நேரம் சமாதானம் பேசிய அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்