பாரிவள்ளல் நகர் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாயகத்திடம் நேற்று அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் பாரிவள்ளல் நகரில், பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாரிவள்ளல் நகரில் மேற்கு கடைசியில் அமைந்திருக்கும் எங்கள் வீடுகளில், மாநகராட்சி நிர்வாகத்தால் இதுவரை வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. மாநகராட்சி பகுதியில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையிலும், இன்று வரை குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உரிய கட்டணம் செலுத்தி, வீட்டு குடிநீர் இணைப்பு பெற தயாராக இருந்தும், குடிநீர் இணைப்பு தர மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இப்பிரச்சினையில், மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதிக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago