:திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே வெள்ளஞ்செட்டிபாளையத்தில், நொய்யல் ஆற்றின் குறுக்கே 1000 ஆண்டுகளுக்கு முன் கொங்கு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. சுமார் 1000 அடி நீளம், 20 அடி உயரமுள்ள இந்த கல் தடுப்பணை கட்டப்பட்டபோது, ஓர் இடத்தில் மட்டுமே உடைந்து கொண்டே இருந்ததாம். அப்போது, அந்த இடத்தில் நல்லம்மாள் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு கட்டப்பட்ட இந்த தடுப்பணை, 1000 ஆண்டுகள் கடந்தும் எந்தவித சேதமுமின்றி கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் பாசன நிலங்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றன. இதையடுத்து, உயிர் தியாகம் செய்த நல்லம்மனை குல தெய்வமாக வழிபட்டு, ஆண்டுதோறும் ஆடி 18-க்கு பின் வரும் செவ்வாய்க்கிழமையும், கார்த்திகை 3-ம் தேதியும் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோயிலுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அணை நடுவே உள்ள நல்லம்மன் கோயில் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. காலை முதல் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக கிலுகிலுப்பை, வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago