தாராபுரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு :

By செய்திப்பிரிவு

தாராபுரத்தில் தொலை தொடர்பு கேபிளுக்காக குழி தோண்டியபோது குழாய் உடைந்து குடிநீர் வீணானது.

தாராபுரம் நகராட்சி புது காவல் நிலைய வீதியில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் பதிக்கப்பட்ட பிஎஸ்என்எல் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை சரி செய்வதற்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் சாலையின் மற்றொரு பகுதியை தோண்டினர். அப்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் ஆறாக ஓடி வீணானது. தகவல் அறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள், குடிநீர் குழாயை அடைத்தனர். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘உடைப்பு சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது, விரைவில் குடிநீர் விநியோக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்