நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள வெறிநாய்க்கடி தடுப்பூசி மையத்தில் தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல் மற்றும் ரணஜன்னி ஆகிய மூன்று வியாதிகளை தடுப்பதற்கு டிபிடி தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் மாதத்துக்கு ஒரு கோடி அளவில் கரோனா தடுப்பூசி குப்பிகளை நிரப்பும் திறன் உள்ளதால், விரைவில் இங்கு தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு சான்றிதழ் அளித்த நிலையில், இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தியை விரைவில் தொடங்க வேண்டும்,மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாஸ்டியர் ஆய்வகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குன்னூர் செயலாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago