அரசின் அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்டு உற்பத்திநிறுவனங்கள் மீது நடவடிக்கைகோரி தமிழ்நாடு எம்-சாண்ட் லாரி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பி.விஜயகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 4 மாதங்களாக தமிழக அரசு ஆன்லைன் மூலமாக மணல் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதை மையப்படுத்தி செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சுமார் 456 எம்.சாண்டு உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 269 எம்.சாண்டு உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. இவற்றில் 25 நிறுவனங்கள் மட்டுமே அரசின் அனுமதியைப் பெற்று இயங்கி வருகின்றது.
எனவே அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்டு உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago