திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே கரையான்சாவடி யில் பொது சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குபூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப் படுகின்றன.
இந்நிலையில் இந்த வளாகத்தில் உள்ள பிளீச்சிங் பவுடர் சேமிப்பு கிடங்கிலிருந்து நேற்றுகாலை திடீரென புகை வெளியேறத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் தீப்பிடித்து எரியதொடங்கின. இதனால் அங்குபணியில் இருந்த ஊழியர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அறைகளில் இருந்து வெளியேறினர்.
தகவலறிந்து பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 5-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago