தவளக்குப்பம் விஐபி நகர் நடேசன் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (எ) ரத்தினம் (38). முடிதிருத்தும் தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். ரமேஷ் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்துவிட்டு தவளக்குப்பத்தில் ஒரு மளிகை கடை எதிரில் கடலூர் - புதுச்சேரி சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில், அவர் தூக்கி வீசப் பட்டார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது மீண்டும் மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் தேடி வரு கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago