கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும், புதிய கழிவுநீர் வாயக்கால்கள் ஏற்படுத்த வேண்டும், சிமெண்ட் சாலைகள் அமைக்க வேண்டும் மற்றும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, சங்கராபுரம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதன் வட்டாரத் தலைவர் பாஸ்கர் தலைமையில் தாரை தப்பட்டையுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் அவர் களை நிறுத்தி, மனுவைப் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago