புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பட்டியல் இனத் தவர், பட்டியல் இன பெண்கள் மற்றும் பெண்கள் (பொது) ஆகிய இடஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 13-ம் தேதி பிற்படுத்தப்பட்டவர், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு குலுக்கல் முறையில் தேர்வா கவுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 1968-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தொடர்ந்து 38 ஆண்டுகளாக மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட் டவர்களின் பதவிக்காலம் 2011ஜூலை மாதத்துடன் முடிவடைந் தது. அதைத்தொடர்ந்து இது வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் நடக் கின்றன.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்நடத்த நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது. வார்டுவாரியான தொகுதி மறுசீரமைப் புக்கு பின் வார்டு வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து பட்டியல் இனத்தவர், பட்டியல் இனப் பெண்கள் மற்றும் பெண்கள் (பொது) ஆகிய இடஒதுக்கீடு அடங்கிய விவரங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு வரும் 13-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் (www.sec.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலுவலக நேரங் களில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேரில் சென்றும் பார்வை யிடலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago