புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது;
ஜெயலலிதா வழியில் செயல்ப டும் பழனிசாமி தமிழகத்தில் முதல் வராக இருந்த சமயத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்புகளில் சேர்வது குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு அளிப்பதற்கான அவசரச்சட்டம் கொண்டு வந்து, செயல் படுத்தினார். 304 மாணவர்கள் பய னடைந்தனர்.
அப்போது புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி அரசு ஏட்டிக்குப் போட்டியாக 10 சதவீத ஒதுக்கீடு அறிவித்தது. அதனை செயல்படுத்த நாராய ணசாமி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேசியஜனநாயக கூட்டணியில், ரங்க சாமி புதுச்சேரி முதல்வராக பதவிஏற்றது முதல் பல நலத்திட்டங் களை செயல் படுத்தி வருகிறார்.முதல்வர் ரங்கசாமி, அரசுப் பள்ளிமாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற வர லாற்று சிறப்பு மிக்க சட்டத்தை நடப்பு கல்வியாண்டே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago