தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு - புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன்பிரதேசங்களில் இயங்கும் மின் துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கைவிடக் கோரி புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கார்ப்பரேஷன், தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை ஏற்படுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

அதன்படி மின்துறை தனியார் மயத்தை கண்டித்து நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மத்திய சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனிடையே, மத்திய அமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், மின்சார சட்டத்திருத்த மசோதா இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றவில்லை என உறுதியளிக்கப் பட்டதால் மத்தியக் கூட்டமைப் பினர் போராட்டத்தை ஒத்தி வைத்திருந்தனர்.

இருப்பினும், அனைத்து மின் துறை தலைமை அலுவலகங்கள் முன்பும் நேற்று ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தஆர்ப்பாட்டத்துக்கு போரட்டக் குழுத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன் னிலை வகித்தார். பொறியாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதவை நிறைவேற்றக் கூடாது. இதற்காக, புதுச்சேரி அரசு சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்தைக் கூட்டி மின்துறையை அரசு துறையாக நீடிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்