புதுச்சேரி சண்முகாபுரம் தெற்குபாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வர் அன்பு மகன் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார் (27). இவர் அப் பகுதியில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை டியூஷன் நடத்தி வந்தார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு டியூஷன் படிக்க வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்து, கொலை மிரட் டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்குமாருக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், பாலி யல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தனது உத்தர வில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago