நகராட்சியில் கொசுத்தொல்லை கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ஏகம்பவாணன், மாநில செயலாளர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தருமபுரி வட்டார, நகர அளவில் கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் காலியாக உள்ள பொறுப்பிடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றம் செய்த மத்திய அரசை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது. தொடர்ந்து அதே பெயரில் அந்த விருது வழங்க வேண்டும். கரோனா 3-வது அலையை தடுப்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தருமபுரி நகராட்சிப் பகுதியில் கொசுத் தொல்லையை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் பணியில் கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்