உணவாக மட்டுமல்ல குழந்தைக்கு தாய்ப்பால் மருந்தாகவும் பயன்படுகிறது : விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் ஆட்சியர் பேச்சு

By செய்திப்பிரிவு

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் ஆட்சியர் பேசியது:

தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல, தேவைக்கு ஏற்ப அது குழந்தைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். குறைந்த பட்சமாக 6 மாதம் வரையும், அதிகபட்சமாக 1 வயது வரையும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களின் எண்ணிக்கை தமிழ்நாடு மாநில சராசரியை விட தருமபுரி மாவட்ட சராசரி அதிக அளவில் இருக்கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

முன்னதாக, விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்