தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடைபெறும்.
அதன்படி, ஆடிப்பூரம் நேற்று காலை 11.24 மணிக்கு தொடங் கியதை அடுத்து, பெருவு டையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு, பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிற்ப்பு அபிஷே கம் நடைபெற்றது. பின்னர் பெரிய நாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோயில் நுழைவாயிலில் உள்ள விநாய கர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார் கள், நடராஜர், வாராஹி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago