யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார் மயமாக் கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, காரைக்காலில் மின் துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.
போராட்டம் குறித்து அவர் கூறியது:
மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்ய அகில இந்திய அளவில் முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரில் இதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படாது என தெரிவித்தார்.
அதனடிப்படையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்கா லிகமாக நிறுத்திவைத்து, தனி யார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு முழுமையாகக் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago