நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிர்க்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப், மே மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்களின் அறுவடை ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வெளி மார்க்கெட்டில் அரசு விலையை விட குவிண்டாலுக்கு ரூ.200 குறைத்தும், ஒரு மாதம் கழித்து பணம் தருவதாகவும் கூறுவதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தற்போது இடைத்தரகர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து நெல் மூட்டைகள் கொண்டு வந்து டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு கொள்முதல் நிலையங் களில் விற்பனை செய்யத் தொடங்கி யுள்ளனர். எனவே, டெல்டா மாவட் டங்களின் எல்லையில் வருவாய்த் துறை, காவல்துறை இணைந்து சோதனை நடத்தி, ஆவணங்கள் இன்றி வரும் நெல்லை லாரியுடன் பறிமுதல் செய்ய வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய, தற்போது கூடுதலாக வேளாண்மை உதவி அலுவலர் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது சாத்தி யமற்றது. இதற்கு பதிலாக வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகள் அனைவருக்கும் பயிர் சாகுபடி விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதே நிரந்தர தீர்வாக இருக்கும்.
காரீப் பருவத்தை அக்.1-ம் தேதிக்கு பதிலாக ஆக.1-ம் தேதி முதல் என மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கோரி வருகிறோம். தமிழக அரசு இதை அமல்படுத்த வேண்டும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் ஆணையம் அளித்த பரிந்து ரைப்படி, சன்ன ரகத்துக்கு குவிண் டாலுக்கு ரூ.2,610, பொது ரகத் துக்கு ரூ.2,590 என விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிர்க்க ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கவுள்ள தால் டிராக்டர் மூலம் இயங்கும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தேவைப்படும் விவ சாயிகளுக்கு 50 சதவீத மானியத் தில் சிறிய அளவிலான உலர்த்தி களை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை செயல்படுத்த வேண் டும். நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண்கள் ஆகி யவற்றை செயல் படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago