மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டன. இந்த பாதையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடர்ந்து அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. பின்னர்அந்த பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை 7 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த 2-வது ரயில் பாதையை, மீளவிட்டான் ரயில் நிலையத்தில் உள்ள பழைய ரயில் பாதையுடன் இணைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதனால், தூத்துக்குடி- மைசூர்- தூத்துக்குடி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு கோவில்பட்டி வரை இயக்கப்பட்டு வருகிறது. தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் வரையிலான 7 கிலோ மீட்டர் ரயில் பாதையில் பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் வரும் 14-ம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி தகுதிசான்றிதழ் கொடுத்த பிறகு, இந்தபுதிய இரட்டை ரயில் பாதையில்பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago