கோவில்பட்டியில் தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளிகளுக்கு சிறப்பு நிதி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு நாலாட்டின்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனி, வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன் தலைமைவகித்தனர்.
மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன், பள்ளி ஆய்வாளர் சசிகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் பென்சர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க 2-ம் துணை ஆளுநர் பிரான்சிஸ் ரவி, பிரமிளாரவி ஆகியோர் கலந்துகொண்டு, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 50 மரக்கன்றுகளை வளர்த்து பராமரிப்பதற்கான சிறப்பு நிதியாக தலா ரூ.5 ஆயிரம், உபகரணங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், பசுமைப்படை ஆசிரியர்களிடம் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago