வேலூருக்கு வரும் வெளி மாநிலத் தவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்தார்.
வேலூர் காந்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டப த்தில் கரோனா 3-வது அலை தடுப்பது குறித்து விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் சங்கரன் பேசும்போது, ‘‘வேலூரில் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. பயத்தில் சிலர் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா வந்தாலும் உயிரிழப்பு ஏற்படாது.
வேலூர் மாநகராட்சி மக்கள் தொகை சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேராக உள்ளனர். இதில், 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 60 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.
வேலூருக்கு வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கரோனா அதிகரித்துள்ளது. குறிப்பாக, விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் அதிகம் பாதிக் கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க விடுதிக்கு வரும் வெளி மாநிலத்தவர் களுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு கரோனா முடிவு வந்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். சானிடைசர், முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago