காட்பாடி அடுத்த வள்ளிமலையில் சென்னை-பெங்களூரு அதிவேக சாலை அமைக்க நில எடுப்பு தொடர்பான மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வள்ளிமலை பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வள்ளிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், சாலை குறித்த வரைபடம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இழப்பீடுகளை விரைவாக வழங்கவும் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago