சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஊத்துக்குளி பகுதி கல் குவாரிகளில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அதிக அளவில் கல் குவாரிகள் உள்ளன. இங்கு அளவுக்கு அதிகமாக கனிம வளம் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், கல் குவாரி தொடர்பாக, சகோதரர்கள் இருவருக்கு இடையே எழுந்த பிரச்சினை தொடர்பாக கல் குவாரிகளை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற குழுவை சேர்ந்த வழக்கறிஞர், வருவாய் கோட்டாட்சியர் ப.ஜெகநாதன், வட்டாட்சியர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் சுமார் 10 கல் குவாரிகளில் நேற்று ஆய்வு செய்தனர்.
அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், கனிம வளம் எடுக்கப்பட்டதா என குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு ட்ரோன்களையும் பயன்படுத்தினர். இதைத்தொடர்ந்து, இந்த குழுவினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago