பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம் : தருமபுரி ஆட்சியர் தலைமையில் முன் திட்டமிடல் கூட்டம்

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் இன்று (10-ம் தேதி) முதல் தொடங்கவுள்ள பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு தொடர்பாக ஆட்சியர் தலைமையில் முன் திட்டமிடல் கூட்டம் நடந்தது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த திட்டமிடல் கூட்டத்துக்கு மாவட்ட ஆட் சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 6 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 10 முதல் 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. நகராட்சி, அனைத்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் இவ்வகை குழந்தைகளை பள்ளிக் கல்வியின் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.

இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகள் வயதுக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் உள்ள முறையான பள்ளிகளிலும், சிறப்பு பயிற்சி மையங்களிலும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் சேர்க்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணியானது கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்புப் பணிகளுக்கு அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) கவுரவ் குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கீதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெமினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் சிவகாந்தி, மாவட்ட கல்வி அலு வலர்கள் பாலசுப்பிரமணி, பொன்முடி, சண்முகவேல், டிஎஸ்பி ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்