சிறுமி மரணம் அடைந்த விவகாரம் - ஆத்தூர் குளிர்பான ஆலைக்கு அதிகாரிகள் சீல் :

By செய்திப்பிரிவு

குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மரணம் அடைந்த விவகாரத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்துள்ளனர்.

சென்னை, பெசன்ட் நகரை சேர்ந்தவர்கள் சதீஷ் - காயத்ரி தம்பதி. இவர்களின் மகள் தரணி(13). வீட்டின் அருகில் உள்ள மளிகைக் கடையில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானத்தை தரணி வாங்கி குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம்தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சிறுமி குடித்த குளிர்பானத்தின் சிறு அளவை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த ஆத்தூரில் உள்ள அந்த குளிர்பான நிறுவனத்துக்கு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்ஜெகதீஷ் சந்திரபோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர்ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

அனுமதி பெறவில்லை

ஆலையில் சுகாதாரம் இல்லை, ஆலை நடத்துவதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவே, ஆலைக்கு சீல் வைக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆலையை மூடி சீல் வைக்குமாறு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் 10 பேர் ஆத்தூரில் உள்ள அந்த குளிர்பான ஆலைக்கு நேற்று சென்று, ஆலையை மூடி சீல் வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்