கோவளம் கடற்கரையில் 2 நாள் அலைசறுக்கு விளையாட்டுப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் கடற்கரையில் ஆண்டுதோறும் அலைசறுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தப்படும். இதில் கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தஅலைசறுக்கு வீரர்கள் பங்கேற்பர். கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அலைசறுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில், தனியார் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் கோவளம் கடற்கரையில் 2 நாள் அலைசறுக்கு விளையாட்டுப் போட்டியை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்தோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி, செயலர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இன்று (ஆக. 10) பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago