மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டம்-2021 தங்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சட்டரீதியான உரிமைகளை பறிக்கக் கூடியது என, பாதுகாப்புத் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிராக, அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இச்சட்டத்தைதிரும்பப் பெற வேண்டும், பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி நேற்று ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் முன்பு பாதுகாப்புத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏடிஎஇஎப் சம்மேளன பொதுச் செயலாளர் குமார், ஓசிஎப் ஓர்க்கர்ஸ் யூனியன் துணை தலைவர்களான காளிதாசன், மோகன்ராஜ், தொமுச பொதுச் செயலாளர் முகமது மீரா, பி.பி.எம்.எஸ். பொதுச் செயலாளர் சதாசிவம், இஎப்ஏஇயு தொழிற்சங்க தலைவர் சிவகுமார், பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago