பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர். உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் பிரச்சினை இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பாரதி பாஸ்கர் பிரபலமடைந்தார். மற்றொரு பேச்சாளரான ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்ற பட்டிமன்றங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.பாரதிபாஸ்கர் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகை குஷ்புட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago