கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் - மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் குழு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயத்தை கார்பரேட்டு களிடம் அடகு வைக்கக்கூடாது. தொழிலாளர்கள் சட்ட தொகுப்பைகைவிட வேண்டும். விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச விலைஉத்திரவாதத்தை உறுதிபடுத்தவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஏ.வி. சரவணன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சிஐடியூ மாவட்ட தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலும் உட்பட மாவட்டத்தில் 12 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகே இந்திய தொழிற் சங்க மையம்,அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். சின்னசேலம் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாய தொழிலாளர் சங்க வட்டத் தலைவர் கே.மூக்கன் தலைமையிலும், திருக்கோவிலூரில் ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆ.வளர்மதி தலைமையிலும், கல்வராயன்மலை ஒன்றியம் வெள்ளிமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத் தலைவர் வி.அண்ணாமலை தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஐகேஎஸ்), அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி குழுக்கள் சார்பில் மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், தொழிலாளர் நலச்சட்ட திருத்தம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் போன்றவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுவை அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தலைவர் முருகன், ஐகேஎஸ் தலைவர் ராமமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் மணிபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதகடிப்பட்டு பேருந்து நிலையம், பாகூர் தேரடி வீதி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்