கடந்த 2011 -2015 இல் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் திமுகவில் இணைந்ததையடுத்து நடந்து முடிந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு மின்துறை அமைச்சர்பொறுப்பு கொடுக்கப் பட்டு ள்ளது. இந்நிலையில், அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கணேஷ் குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago