வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "பெரியாறு வைகை பாசனம் 2021-2022-ம் ஆண்டுக்கு பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் வைகை அணையில் இருந்து ஆக.11-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் 11,716 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago